close
Choose your channels

மாதவன், தனுஷ் பட நடிகை கர்ப்பம்.. இன்ஸ்டாவில் அறிவிப்பு..!

Wednesday, June 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாதவன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகை கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’, தனுஷ் நடித்த ‘ராஜண்ணா’ ஆகிய படங்கள் உள்பட பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வாரா பாஸ்கர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பகத் அகமது என்ற சமூக ஆர்வலரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து விரைவில் எங்கள் குடும்பத்தின் விருந்தினரை வரவேற்க காத்திருக்கின்றோம் என்று பதிவு செய்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஸ்வாரா பாஸ்கர் தற்போது ’Mrs Falani’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.