மாதவனின் 'ராக்கெட்டரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,February 14 2022]

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதிகள் ஒரு சில அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் அந்த தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததையடுத்தும், திரையரங்குகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்தும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 1 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாதவன் தனது சமூக வலைத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மாதவன், சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றாகும்.

More News

பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வார நாமினேஷனில் சிக்கிய 8 போட்டியாளர்கள் யார் யார்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரம் சுஜாவும் எலிமினேஷன் செய்யப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

10 வருட காதல் பந்தம்: காஜல் அகர்வாலின் 'காதலர் தின' புகைப்படம்!

இது 10 வருட காதல் பந்தம் என தனது கணவர் கௌதம் உடன் இருக்கும் புகைப்படத்தை காதலர் தின புகைப்படமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் பதிவு செய்துள்ள

அமீர்-வெற்றிமாறன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் அமீர் ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைய உள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில்

சொகுசு பேருந்து கிலோ ரூ.45… விரக்தியில் கூவிகூவி விற்கும் முதலாளியின் பரிதாபம்!

கேரளாவில் பேருந்து உரிமையாளர் ஒருவர் தன்னுடைய சொகுசு பேருந்துகளை கிலோ ரூ.45 என்று கூறுபோட்டு விற்கும்

முதல்முறையாக மைக் மோகனுடன் ஜோடி சேரும் குஷ்பு!

கடந்த 80 களில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும்