close
Choose your channels

மாதவன் பட இயக்குனர் கவலைக்கிடம்: ரசிகர்கள் பிரார்த்தனை 

Wednesday, August 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவரும் பிரபல பாலிவுட் இயக்குனருமான நிஷிகாந்த் காமத் என்பவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்

பாலிவுட் திரையுலகிற்கு கடந்த சில மாதங்களாகவே நேரம் சரியில்லை போலும். கடந்த சில மாதங்களில் பாலிவுட் நடிகர் இர்பான்கான், ரிஷிகபூர், சுஷாந்த் சிங் உள்பட பல பிரபலங்கள் ஏற்கனவே மரணம் அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் நிஷிகாந்த் காமத் தற்போது கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற ’த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கியது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.