தயவுசெய்து மருத்துவரை பாருங்கள்: விமர்சனம் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,January 07 2021]

சமூக வலைதளங்கள் மூலம் தன்னை விமர்சனம் செய்த ரசிகரை ’தயவுசெய்து மருத்துவரை பாருங்கள்’ என்று நடிகர் ஒருவர் அட்வைஸ் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் மாதவன். இவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமித்சாத் என்பவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த பதிவுக்கு பெரும்பான்மையானோர் பாராட்டு தெரிவித்த நிலையில் ஒரு ரசிகர் மட்டும் மாதவனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

ஒரு காலத்தில் இந்தி திரையுலகில் மாதவன் நுழைந்த போது மிகவும் எனது விருப்பத்திற்குரிய நடிகராக அவர் இருந்தார். அவரை நான் மிகவும் ரசித்தேன். ஆனால் இப்போது அவர் கண்களையும் முகத்தையும் பார்க்கும்போது அவர் மதுப்பழக்கத்தால் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடைய சினிமா வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் போதை பழக்கத்தால் அழித்து கொள்வதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்

ரசிகரின் இந்த கமெண்டுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மாதவன் பதிலடியாக ’இதையெல்லாம் நீங்கள் கண்டுபிடித்து உள்ளீர்களா? உங்கள் பெற்றோரை நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை அவசியம் பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். மாதவனின் இந்த பதிலடி தற்போது வைரலாகி வருகிறது

More News

இந்த நடிகரை புகழ்ந்து புகழ்ந்து வாயே வலிக்குது: நெட்டிசன்கள் புலம்பல்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் அனைத்து இந்திய மக்களின் மனதிலும் ஹீரோவாக புகழப்பட்டவர் வில்லன் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே.

ரியோ கோமாளியா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி ரவி!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பதும், அவர் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி வருகிறார் என்பதும் பைனலுக்கு செல்லும் நான்கு பேர்களில் கண்டிப்பாக அவரும் ஒருவராக இருப்பார்

ஹவுஸ்மேட்ஸ்களை உருண்டு புரளவைத்த பிக்பாஸ்: வெற்றியை முடிவு செய்யும் 3வது அம்பயர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே 6 சுற்றுகள் முடிந்துவிட்ட நிலையில் இன்று 7வது சுற்று நடைபெறுகிறது

ஃபினாலே டாஸ்க்; கடைசி இடத்தை பிடித்த பின் ஆரி பேசிய மாஸ் பஞ்ச் டயலாக்

ஃபினாலே டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற ஆறு போட்டியாளர்களின் குறையை சொல்ல வேண்டும் என்ற நிலையில் முதலில் தொடங்கும் ஆரி ஒவ்வொருவரின் குறையையும்

நல்லவன், கெட்டவன் எவனும் இல்லை: பாட்டு பாடும் பாலாஜியை முறைக்கும் ஆரி!

பிக்பாஸ் வீட்டில் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் கமல்ஹாசன் பாலாஜிக்கு