மாதவன்-விஜய்சேதுபதிக்கு பெருமை சேர்த்த விக்ரம்-வேதா

  • IndiaGlitz, [Saturday,July 22 2017]

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய்சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த படம் ரூ.4 கோடி முதல் நாள் வசூலாக பெற்றுள்ளது. சென்னையில் ரூ.51 லட்சமும், கோவையில் ரூ.65 லட்சமும் செங்கல்பட்டு பகுதியில் ரூ.1.15 கோடியும் வசூலாகியுள்ளது. இந்த வசூல், மாதவன் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவருக்குமே சிறந்த ஓப்பனிங் வசூல் படம் என்ற பெருமையை பெற்றுத்தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் இந்த வார இறுதி நாட்களில் 'விக்ரம் வேதா' படத்தின் வசூல் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

More News

தமிழ் திரைப்பட இசையமைப்பாளரின் திருமண தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கிய 'பாரிஜாதம்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண்குமார்.

ஓவியாவுக்கு ஆதரவு கொடுத்த த்ரிஷா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை ஓவியாவுக்கு ஏற்கனவே அமோக ஆதரவு அனைத்து தரப்பினர்களிடம் இருந்து வந்து கொண்டே இருக்கின்றது.

வளர்மதியை அடுத்து மீண்டும் ஒரு மாணவர் கைது

சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி என்பவர் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் ஆகியவற்றை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்

போலீஸ் விசாரணைக்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் பிரபல நடிகை

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விறுவிறுப்பாக நடத்தி கொண்டிருக்கும் நிலையில், இதே விறுவிறுப்புடன் தெலுங்கிலும் ஜூனியர் என்.டி.ஆர் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்...

ஜோதிகாவிடம் இருந்து விடை பெற்ற பிரபல நடிகர்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வரும் அடுத்த படம் 'நாச்சியார்'. இந்த படத்தில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஜோதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.