கொரோனா அதிகரிப்பால் ஊரடங்குக்குள் செல்லும் இந்தியாவின் சில முக்கிய நகரங்கள்… பரபரப்பு தகவல்!!!

  • IndiaGlitz, [Saturday,November 21 2020]

 

மத்தியப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை அம்மாநிலத்தின் மொத்த தொற்று எண்ணிக்கை 1.89 லட்சமாக அதிகரித்து உள்ளது. மேலும் உயிரிழப்பு 3,138 ஆக அதிகரித்த நிலையில் இந்த மாதத்தில் மட்டும் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் நிலைமையை சமாளிக்க மீண்டும் சில நகரங்களில் ஊரடங்கு விதிமுறைகள் கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கப் பட்டது.

இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சில நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு கொண்டு வரப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் இந்தூர், போபால், குவாலியர், ரட்லாம், விதிஷா போன்ற நகரங்களில் இரவு 10-காலை 6 வரை முழு ஊரடங்க விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதேபோல கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக குஜராத்தின் அகமதாபாத் நகரத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சூரத், வதோரா, ராஜ்கோட் ஆகிய பகுதிகளிலும் இரவு நேர ஊரடங்கு கொண்டுவரப்படும் எனக் கூறப்படுகிறது.

More News

வடமாநிலங்களில் களைக்கட்டும் சாத்பூஜை… எதற்கு இந்த கொண்டாட்டம் தெரியுமா???

சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகை சாத்பூஜை.

உலகின் மிகப்பெரிய விருதான புக்கர் விருது அறிவிப்பு…

இலக்கியத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் புக்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது

திமுக முன்னாள் எம்.பி தற்போது பாஜகவில்!!!

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

கமல் பட நடிகையின் மகள் சினிமாவில் அறிமுகம்: ரசிகர்கள் வரவேற்பு!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக் படமான 'பாபநாசம்' மற்றும் 'தூங்காவனம்' ஆகிய தமிழ் படங்களிலும் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஆஷா சரத்.

இன்று ரஜினி-அமித்ஷா சந்திப்பு நடக்குமா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வரவிருக்கும் நிலையில் முதல்வர்,