50 மாணவர்களுக்கு திருக்குறள். சென்னை ஐகோர்ட் நீதிபதி வழங்கிய வித்தியாசமான தீர்ப்பு

  • IndiaGlitz, [Thursday,April 06 2017]

சென்னை ஐகோர்ட் நீதிபதி ஒருவர் சமீபத்தில் குற்றவாளி ஒருவருக்கு கருவேல மரங்களை அழிக்கும் தண்டனை கொடுத்த நிலையில் இன்னொரு தீர்ப்பில் 50 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது
திருவள்ளுவரை சேர்ந்த முத்து என்பவர் சுடுகாட்டு பிரச்சனை தொடர்பாக ஒருவரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வேண்டி முத்து மனுதாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதனை மறைத்து வேறொரு வக்கீல் மூலம் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த முறைகேடு நீதிமன்றத்தின் கவனத்திற்கு மீண்டும் வந்தபோது நீதிபதி வைத்தியநாதன் முத்துவுக்கு ரூ.2500 அபராதம் அல்லது 2 நாள் சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இருந்தது. ஆனால் முத்து, தான் செய்த குற்றத்தை உணர்ந்து திருந்த வேண்டும் என்பதற்காக அவர் இருக்கும் பகுதியில் உள்ள 2 பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்களுக்கு 50 திருக்குறள் புத்தகங்களை இலவசமாக வழங்க உத்தரவிட்டார். இந்த வித்தியாசமான தீர்ப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

More News

14 நிமிடங்களில் ரெடியான போட்டோபிளக்ஸ். தல ரசிகர்களின் கெத்து

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டாவது ஸ்டில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது...

அஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவில் கிடைத்த சர்ப்ரைஸ்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்து படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளனர். மேலும் சென்னையில் ஒரு குழு இந்த படத்தின் டீசரை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது...

'விவேகம்' படத்தில் அஜித் கேரக்டரின் பெயர்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் நடித்து வரும் 'விவேகம்' திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது...

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி கூட்டணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் புரமோஷன் ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க வைத்துள்ளது...

தயாரிப்பாளர் சங்கத்தை பிடித்த விஷாலால் ஆர்கே நகரை பிடிக்க முடியாதா? : ஆர்யா

நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தல் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஜெயிக்க முடிந்தபோது ஆர்கே நகர் தேர்தலில் ஜெயிக்க முடியாதா? என்று ஆர்யா நகைச்சுவையுடன் கூறியுள்ளார்...