கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானதை அடுத்து அவரது உடலை சென்னை மெரீனாவில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக தரப்பில் நேற்று தமிழக அரசிடம் வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் தமிழக அரசு மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க மறுத்துவிட்டது

இதனையடுத்து திமுக சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தது. அவசர வழக்காக பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை நேற்றிரவு நடந்தது. பின்னர் இன்று காலை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இருதரப்பு வாதங்களும் முடிந்து சற்றுமுன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில், 'கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு வெளியானதை அடுத்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். மேலும் திமுக தொண்டர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது.

More News

கருணநிதிக்கு அஜித், சூர்யா அஞ்சலி: அமெரிக்காவில் இருந்து விஜய் திரும்புவாரா?

திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதி மறைவு செய்தி கேட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பவர்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தியை பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்த செய்தி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திரையுலகினர் ஆழ்ந்த சோகத்துடன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கருணாநிதிக்கு இறுதியஞ்சலி: தலைவர்கள் வரும் நேரம்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானதை அடுத்து பெருந்திரளாக திமுக தொண்டர்களும், தமிழக அரசியல்வாதிகளும், திரையுலகினர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இப்போதாவது 'அப்பா' என அழைக்கட்டுமா? ஸ்டாலின் கண்ணீர் கடிதம்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு அனைவருக்கும் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக கருதப்படுகிறது.