close
Choose your channels

எங்கள் வீட்டின் தெய்வம் இவர்: மதுரை முத்துவின் உருக்கமான பதிவு!

Friday, February 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எங்கள் வீட்டின் தெய்வம் இவர் என மதுரை முத்துவின் சமீபத்திய பதிவை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமான மதுரைமுத்து, அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் உள்ள பல நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து கொள்கிறார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமானதற்கு மதுரை முத்துவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவர் போட்டியாளராக இருந்து எலிமினேட் ஆனபோதிலும் மீண்டும் மீண்டும் அவரை அனைத்து எபிசோடுகளிலும் வரவழைத்தனர்.

இந்த நிலையில் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்து வரும் மதுரை முத்துவின் வாழ்க்கையிலும் ஒரு சோகம் நடந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 4ஆம் தேதி தான் அவருடைய மனைவி கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை அடுத்து தனது மனைவியின் நெருங்கிய தோழியை தனது இரண்டு மகள்களின் எதிர்காலம் கருதி திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் தனது மனைவி இறந்து ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலியை தனது சமூக வலைத்தளத்தில் உருக்கத்துடன் பதிவு செய்த மதுரை முத்து மறைந்த தனது மனைவியை ‘எங்கள் வீட்டின் தெய்வம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அவரது பதிவிற்கு ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos