close
Choose your channels

ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு 

Wednesday, November 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா நடித்த 'கஜினிகாந்த் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது சூர்யா நடித்து வரும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை சற்றுமுன் நடந்தது. இந்த படத்திற்கு 'மகாமுனி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தை சாந்தகுமார் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அருள்நிதி நடித்த 'மௌனகுரு படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.