close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல்!

Sunday, January 19, 2020 • தமிழ் Comments

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இடையே அவர் ’ஜனகணமன’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அகமது இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மகிழ்திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் ஜெயம்ரவியின் படத்தை அவர் இயக்குவார் என தெரிகிறது.

இந்த படத்தை ஸ்கிரீன்சீன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ’தடம்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய மகிழ் திருமேனி ஜெயம் ரவிக்காக ஒரு சூப்பர் ஆக்ஷன் கதையை தயார் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz