close
Choose your channels

விஜய்சேதுபதி பட வில்லனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்

Tuesday, June 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படங்களின் எண்ணிகையை பார்த்தால் இரண்டு மாதங்களுக்கு ஒரு படம் வெளிவரும் என தெரிகிறது

அந்த வகையில் விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்றை வெங்கடகிருஷ்ண ரோஹ்நாத் இயக்கி வருகிறார். இசை சம்பந்தப்பட்ட இந்த படத்தில் முதல்முறையாக விஜய்சேதுபதியுடன் ஜோடி சேருகிறார் அமலாபால்

இந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிக்கவுள்ளார் பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி. 'தடையற தாக்க', 'தடம்' போன்ற படங்களை இயக்கிய இவர் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தின் வில்லன் அனுராக் காஷ்யப் அவர்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குரலுக்காகவே அவரை இந்த படத்தின் வில்லன் கேரக்டருக்கு தேர்வு செய்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதியின் 33வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து வருகிறர். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் இசக்கிதுரை தயாரித்து வருகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.