மகேஷ்பாபுவின் ஸ்ரீமந்துடு படத்தின் தமிழ் டைட்டில்

  • IndiaGlitz, [Saturday,July 25 2015]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடித்த ஸ்ரீமந்துடு திரைப்படம் முதன்முதலாக ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவரவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதற்காக மகேஷ்பாபுவே தமிழ் டப்பிங் பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்தார். பாகுபலி' போன்ற தெலுங்கு திரைப்படங்கள் அபரீதமான வசூலை தமிழகத்தில் கொடுத்ததால், மகேஷ்பாபு தமிழில் ரிலீஸ் செய்யும் முடிவை எடுத்தார் என கூறப்பட்டது.


இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு 'செல்வந்தன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலோடு தற்போது இந்த படத்தின் தமிழ் போஸ்டர்கள் இணையத்தில் படக்குழுவினர்களால் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

நம்மூர் சூப்பர் ஸ்டார் விஜய்யின் ஜில்லா நேற்று தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸாகி வெற்றி பெற்று வரும் நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் படம் ஒன்று நேரடியாக தமிழில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன், ஜெகதிபாபு, சுகன்யா, பிரம்மானந்தம், சனம் ஷெட்டி மற்றும் பூர்ணா ஆகியோர் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு விஜய்யின் 'புலி' பட இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கொரட்டாலா சிவா இயக்கியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

More News

போலீஸில் புகார் அளித்த போலீஸ் நடிகை

சமீபத்தில் ரிலீஸான 'பாபநாசம்' திரைப்படம் 'பாகுபலி'யின் அபார வசூலுக்கு இடையே தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த 6 படங்களில் பணியாற்றிய ஒரே நபர்

கோலிவுட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை அள்ளி தந்த படங்கள் என்று பார்த்தால் அவை எந்திரன், துப்பாக்கி....

விஜய்-சமந்தா முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

ஜெயம் ரவியுடன் இணையும் அஜீத்தின் தங்கை மற்றும் மகள்

சிபிராஜுக்கு 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த இயக்குனர் சக்தி செளந்தரராஜன், இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்...

இசைஞானிக்கு சம்பர்ப்பணம் செய்யப்பட்ட விஜய் பாடல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தில் இடம்பெற்ற 'ஏண்டி ஏண்டி' பாடலின் டீசர் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது...