close
Choose your channels

சிம்பு-சுந்தர் சி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

Wednesday, October 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் சிம்புவின் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து கொண்டிருக்கின்றார்

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தில் தற்போது சிம்புவின் நெருங்கிய நண்பரும், பிக்பாஸ் 2 பிரபலமுமான மகத் இணைந்துள்ளார். இந்த தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள மகத், இதுகுறித்த விபரங்கள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ரித்விகாவிடம் தான் சிம்புவுடன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக மகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.