close
Choose your channels

பிராய்ச்சி மிஸ்ராவுடன் திருமண கோலத்துடன் ஆட்டம் போட்ட மகத்: வைரலாகும் வீடியோ

Friday, May 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்களின் ஒருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமானமாக மகத் மற்றும் மாடல் அழகி பிராய்ச்சி மிஸ்ராவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி திருமணம் நடந்தது என்பதும் இந்த திருமணத்தில் சிம்பு, விடிவி கணேஷ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கழித்து தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. பிராய்ச்சி மிஸ்ராவின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் மகத், பிராச்சி மிஸ்ரா கழுத்தில் தாலி கட்டும் காட்சிகள் உள்பட பல காட்சிகள் உள்ளது. மேலும் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்கள் ஆட்டம் போடும் காட்சிகளும் அவர்களுடன் இணைந்து மகத், பிராய்ச்சி தேசாய் ஆடும் காட்சிகளும் உள்ளன. இதுவரை வெளிவராத இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கோலாகலமாக நடக்கும் இந்த ஆட்டத்தில் விடிவி கணேஷ் உள்பட பிரபலங்களும் ஆடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோவை வெளியிட்டு இதுகுறித்து கூறிய பிராய்ச்சி தேசாய், இந்த வீடியோவை எடிட் செய்தவர்களுக்கு நன்றி என்றும், திருமணத்தின் போது பலவிதமான வீடியோ காட்சிகளை எடுக்கப்பட்டதாகும் இருப்பினும் இந்த வீடியோ தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.