சென்னை CAA எதிர்ப்பு போராட்டம்.. மஹாத்மா காந்தியின் பேரன் நேரில் வந்து ஆதரவு..!

  • IndiaGlitz, [Monday,February 17 2020]

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நடந்து வரும் பட்ஜெட்ட கூட்டத்தொடரில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் கடந்த 14ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர்.

அன்றைய தினம் இரவு காவல் துறை தடியடி நடத்தியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த தடியடியை கண்டித்து பெண்கள், குழந்தைகள் என இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4-ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில் ஷாகீன்பாக் போராட்டத்தை போன்று அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

More News

கொரோனவை விட மோசமான வைரஸ் இந்தியாவை பிடித்துள்ளது..! பாஜகவை சாடிய சஞ்சய் தத்.

கரோனா வைரஸை விட கொடூரமான வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏஆர் ரகுமானின் மகளைச் சீண்டிய பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்

தஸ்லிமான நஸ்ரின், முஸ்லிம் பெண்கள் மத அடிப்படையில் ஒடுக்கப் படுவ

இராணுவத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் உயர் பதவிகள் வழங்க வேண்டும்..! உச்சநீதிமன்றம்.

ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு, ஆண் அதிகாரிகளுக்கு இணையான கமாண்டர் பொறுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

டைட்டில் வைக்கும் முன்னரே வியாபாரம் ஆகிவிட்ட தனுஷ் படம்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய தனுஷின் 40வது திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

14 ஆண்டுகள் சிறை.. விடுதலையாகி, எம்.பி.பி.எஸ் படித்து டாக்டரான இளைஞர்..!

சிறு வயது முதலே அவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அந்த லட்சித்தை சிறைக் கம்பிகளால் தகர்க்க முடியவில்லை. .