close
Choose your channels

'அசுரன்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்

Monday, October 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய ‘அசுரன்’ திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

சினிமா ரசிகர்கள், ஆன்லைன் விமர்சகர்கள், சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட கோலிவுட் பிரமுகர்கள் இந்த படத்தை பாராட்டி கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களில் இருந்தும் இந்த படத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்களின் அசுரன் திரைப்படத்தை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். ’அசுரன்’ திரைபடம் ரியலாகவும், தீவிரமாகவும் உருவாக்கப்பட்ட ஒரு படம் என்றும், இந்த படத்தின் குழுவினர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஒருபக்கம் குவிந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் வசூலிலும் சாதனை செய்து வருகிறது. மொத்தத்தில் இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் இந்த படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.