'தளபதி 66' படத்தில் இந்த சூப்பர் ஸ்டார் மகள் நடிக்கின்றாரா?

தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே.

தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிய இருப்பதாகவும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’தளபதி 66’ திரைப்படத்தில் தளபதி விஜய்யின் மகளாக ஒரு சூப்பர் ஸ்டாரின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்தான் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு மகள் என்றும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடித்த ’தெறி’ திரைப்படத்தில் விஜய்யின் மகள் கேரக்டரில் மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. அதே போல் இந்த படத்தில் மகேஷ்பாபு மகள் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் ’தளபதி 66’ திரைப்படம் ஒரு சென்டிமென்ட் கதை என்றும் குடும்ப கதையம்சம் கொண்டது என்றும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆக்ஷன் என்ற பாதையில் இருந்து விலகி குடும்ப சென்டிமென்ட் கதையில் விஜய் நடிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

More News

கணவர் இறந்தபோது நான் அழவே இல்லை: பவானி ரெட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பவானி ரெட்டி திருமணமானவர் என்றும், திருமணமான ஏழே மாதத்தில் கணவரை இழந்தவர் என்பதும் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஏற்கனவே தெரிந்தது

நடிகை என்ற பந்தாவெல்லாம் எனக்கில்லை… வீடியோ வெளியிட்ட இளம் நடிகை!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகை ராஷிகண்ணா.

இதற்குத்தான் நடிக்கவே வந்தேன்… மேடையில் உருக்கமாகப் பேசிய நடிகர் விஜய்சேதுபதி!

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவைத் தவிர தற்போது ஹிந்தி,

பிக்பாஸ் பவானிரெட்டியின் சோகமான மறுபக்கம்!

பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது என்பதும் நேற்றைய தினம் முதல் நாளில் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு இருந்தனர்

கலைஞர்கள் கஷ்டத்தை வெளியே சொல்லக்கூடாது: பாடகிக்கு டிஸ்லைக் போட்ட ராஜூ ஜெயமோகன்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை மனம்விட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதை முதல் புரமோவில் பார்த்தோம்.