'ஸ்பைடர்' இசை வெளியீடு: ஆந்திராவில் இருந்து குவிந்த மகேஷ்பாபு ரசிகர்கள்

  • IndiaGlitz, [Saturday,September 09 2017]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த விழாவுக்கு மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் வருகை தரவுள்ளனர்.

இந்த நிலையில் விசாகப்பட்டணம், நெல்லூர் உள்பட ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மகேஷ்பாபு ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் குவிந்துள்ளனர். மகேஷ்பாபுவின் ரசிகர்கள் நீண்ட வரிசையில் அரங்கத்தில் உள்ளே செல்வதற்கு காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமான 'ஸ்பைடர்' படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடித்துள்ளார். மேலும் முதல்முறையாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் வில்லனாகவும் தோன்றுகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். 
 

More News

'களவாணி 2' படத்தில் ஓவியா நடிக்கின்றாரா? விமல் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் உலகப்புகழ் பெற்ற ஓவியாவுக்கு இன்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது ஒரே ஒரு டுவிட்டர் ஸ்டேட்டஸூக்கு லைக்குகள் குவிந்து வருவதில் இருந்தே இதை தெரிந்து கொள்ளலாம்

டெங்கு காய்ச்சலுக்கு பலியான பேங்க் ஆப் அமெரிக்காவின் எம்டி: 

தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும், இந்த காய்ச்சலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதும் தெரிந்ததே.

100வது நாளில் நிர்வாண போராட்டம்: டெல்லியில் எச்சரிக்கை விடுத்த தமிழக விவசாயிகள்

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் இரண்டாவது கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று முதல் மீண்டும் 'பாகுபலி': மகிழ்மதியை நேரில் பார்க்க வாய்ப்பு

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது.

'கதாநாயகன்', 'நெருப்புடா' படங்களின் முதல் நாள் வசூல் எப்படி?

நேற்று வெளியாகியுள்ள விஷ்ணுவிஷாலின் 'கதாநாயகன்' மற்றும் விக்ரம்பிரபுவின் 'நெருப்புடா' ஆகிய இரு படங்களுமே அந்தந்த படங்களின் ஹீரோக்கள் தயாரிப்பில் உருவானது.