close
Choose your channels

பிறந்தநாளில் தளபதி விஜய்க்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ்பாபு: வைரலாகும் வீடியோ

Sunday, August 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கிரீன் இண்டியா என்ற ஒரு சேலஞ்ச் சமூக வலைதளங்களில் திரையுலக நட்சத்திரங்கள் இடையே பரவி வருகிறது. இந்த சேலஞ்சை ஏற்கும் திரையுலக பிரபலங்கள் தங்கள் வீட்டில் செடிகளை நட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, அதன் பின்னர் அவர்கள் மற்றொரு திரை நட்சத்திரத்திற்கு சேலஞ்ச் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா உள்பட பலர் இந்த சேலஞ்சில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பிறந்தநாளை அடுத்து நடிகர் மகேஷ் பாபு தனது வீட்டில் செடிகளை நட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதன்பின் அவர் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஜூனியர் என்டிஆர், விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர்களுக்கு விடுத்துள்ளார். மகேஷ்பாபுவின் இந்த சேலஞ்சை தளபதி விஜய் உள்பட மூவரும் ஏற்று தங்கள் வீடுகளில் செடிகளை நடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த பிறந்த நாளை இதை விட என்னால் சிறப்பாக கொண்டாட முடியாது என்றும் இந்தியா முழுவதும் பசுமையாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மகேஷ்பாபு தனது பிறந்த நாள் செய்தியாக ரசிகர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.