மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் பட டைட்டில்?

  • IndiaGlitz, [Sunday,April 02 2017]

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் டைட்டில் 'சாம்பவாமி', 'மர்மம்', 'அபிமன்யூ' என பலவாறான செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்திற்காக 'ஸ்பைடர்' என்ற டைட்டில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் இந்த டைட்டில் வரிவிலக்கு பிரச்சனை காரணமாக தமிழில் வைக்கப்படுமா? என்பது கேள்விக்குரியே. எனவே இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை பொறுமை காப்போம்

மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமான இந்த படத்தில் நாயகியாக ராகுல்ப்ரித்திசிங் மற்றும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். ரம்ஜான் திருநாள் விடுமுறை தினத்தில் இந்த பாம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கொலை செய்யப்பட்ட பரூக் குடும்பத்திற்கு சத்யராஜ் செய்த மகத்தான உதவி

சமீபத்தில் கோவை பகுதியில் பரூக் என்ற கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். திராவிட கழகத்தை சேர்ந்த பரூக், இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து கூறியதால் ஆத்திரமடைந்து பரூக்கை கொலை செய்ததாக அன்சாத், சதாம் உசேன் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்...

காதல் மன்னன் கேரக்டரை மிஸ் செய்த சூர்யா

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் கேரக்டரில் பிரபல நடிகர் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த கேரக்டரில் சூர்யா நடிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். வெற்றி பெறுவது யார்?

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன் தொடங்கியுள்ளது.

ஏப்ரல்-1: இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள்

ஏப்ரல்-1. இந்த தேதியை கேட்டால் அனைவருக்கும் முட்டாள்கள் தினம்தான் ஞாபகம் வரும். ஆனால் இந்த வருடம் ஏப்ரல் 1, மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது

தனுஷ் மற்றும் சவுந்தர்யாவுக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கடந்த சில மாதங்களாக 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது