தமிழில் தயாராகும் உலகப்புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் படம்

  • IndiaGlitz, [Tuesday,June 13 2017]

பிரபல ஈரான் இயக்குனர் மஜித் மஜிடி படம் என்றாலே உலகப்புகழ் பெற்றது என்பது சினிமாவை தெரிந்த அனைவருக்கும் தெரியும். அவரது பாதுக்(Baduk), சில்ரன் ஆஃப் ஹெவன்,(Children of Heaven) த கலர் ஆஃப் பாரடைஸ்,( The Color Of Paradise) பாரன்,( Baran) த வில்லோ ட்ரீ, ( The Willow Tree) த சாங் ஆஃப் ஸ்பாரோஸ், (The Song of Sparrows) மொஹமத் தமெசன்ஜர் ஆஃப் காட் (Muhammad The Messenger of God). ஆகிய திரைப்படங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்த படங்கள் ஆகும்.

இந்த நிலையில் தற்போது மஜித் மஜிடி, 'பியண்ட் த க்ளவுட்ஸ்' என்ற படத்தை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படம் தமிழிலும் தயாராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற படங்கள் போல ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு குரலை மட்டும் வேறு மொழிக்கு மாற்றாமல் மூன்று மொழிகளிலும் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் , மலையாள நடிகை மாளவிகா மோகனன், பழம்பெரும் தமிழ் நடிகை ஜி வி சாரதா உள்பட பலர் நடித்து வருகின்றனர். அண்ணன் - தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ஐகேன்டீ ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இந்த படத்தின் திரைக்கதையிலும் , உள்ளடக்கத்திலும் மூன்று மொழிகளுக்கான கூறுகள் உள்ளன. அதனால் தான் இந்த மூன்று மொழிகளைச் சார்ந்த கலைஞர்களை அதன் மரபு மாறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இயக்குனர் மஜித் மஜிடி தேர்ந்தெடுத்திருக்கிறார். உதாரணத்திற்கு திரைக்கதையில் தமிழக நகரம் இடம்பெற்றிருந்தால், அவர் தமிழக நகரத்திற்கு வந்து தமிழ் பேசும் மக்களின் பின்னணியில் தான் அந்த காட்சியை படமாக்குகிறார். இதன் மூலம் தன்னுடைய படைப்பிற்கான நேர்மையை வழங்குவதில் தன்னிகரற்று திகழ்வதாக இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

More News

ஐஐடி தேர்வில் சமோசா விற்பவரின் மகன் செய்த சாதனை

இந்தியத் தொழில்நுட்பக் கழகமான ஐஐடி-யில் சேர்ந்து படிக்க ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஜெஇஇ (JEE) என்ற நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும். இதன்படி, நடப்பாண்டில் ஐஐடியில் சேர்வதற்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன...

இந்தியாவிடம் எனது வித்தை செல்லுபடியாகும். வங்கதேச பந்துவீச்சாளர்

ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி தற்போது கிட்டத்தட்ட இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

லூசுப்பசங்க! பாடகி சின்மயி சொல்வது யாரை தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழக அரசின் கால்நடைப் பாதுகாப்பு துறை சார்பாக உரிய உரிமங்கள் பெற்று பசுக்களை ஏற்றி வந்த 5 லாரிகள் மீது 50 பேர் கொண்ட கும்பல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது...

அழுகிய நிலையில் கேட்பாரற்று கிடந்த நடிகையின் பிணம்

பாலிவுட் நடிகை ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

கூவத்தூரில் ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதா? கருணாஸ் விளக்கம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக ஏற்கனவே பல புலனாய்வு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன என்பது தெரிந்ததே....