close
Choose your channels

'மாஸ்டர்' படப்பிடிப்பை பார்க்க வந்த பிரபலத்தின் தந்தை!

Saturday, January 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி மற்றும் ஷிமோகா ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் மீண்டும் நாயகி மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இந்த படப்பிடிப்பை அவருடைய தந்தையும் பார்வையிட வந்ததாக புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை மாளவிகா மோகனன் பதிவு செய்துள்ளார். மாளவிகாவின் தந்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்டண்ட் சில்வா ஆகியோர் இந்த புகைப்படத்தில் உள்ளனர்.

‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் வெறும் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் நாயகியாக இல்லாமல் அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் சாந்தனு பாக்கியராஜ், அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.