தனுஷை அடுத்து பாலிவுட் நடிகருக்கு ஜோடியான 'மாஸ்டர்' மாளவிகா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருந்தாலும் மாளவிகா மோகனனுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கித் தந்தது தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் தான். இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் அவருக்கு தமிழ் உள்பட தென்னிந்திய திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள திரைப்படத்தில் மாளவிகா மோகனன் தான் நாயகி என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடிக்க இருக்கும் வெப்தொடர் ஒன்றிலும் நாயகி மாளவிகா மோகனன் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அமேசான் பிரைம் தயாரிக்கும் இந்த தொடர் அதிரடி ஆக்ஷன் வெப்சீரிஸ் என்றும் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே மாளவிகா மோகனன் பாலிவுட்டில் ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படது. ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அவர் பல திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடிக்க கமிட் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'மாஸ்டர்' டீசர், டிரைலர் எப்போது? லோகேஷ் கனகராஜ் தகவல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸ்க்கு கடந்த ஏப்ரல் மாதமே தயாராக உள்ளது என்பதும் ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களாக இந்த படம் ரிலீசாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக வரும் 'நாலு நிமிஷம்'

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

கட்டியணைத்து முத்தமிடும் நட்சத்திர ஜோடி: வைரலாகும் புகைப்படங்கள்!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உதயநிதியின் அடுத்த படம்: நாயகி, இயக்குனர் அறிவிப்பு!

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்குவது மகிழ்திருமேனி என்ற செய்திகள் ஏற்கனவே வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரபூர்வ அறிவிப்பு

கேப்டன்சி டாஸ்க்: தவறை உணர்ந்து பிராயசித்தம் செய்த பாலாஜி!

இந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க்கில் சோம், பாலாஜி மற்றும் சம்யுக்தா ஆகிய மூவர் கலந்து கொண்டிருந்த நிலையில் சோம் ஜெயிக்க கூடாது என்றும் அவர் ஒரு கைப்பொம்மை என்றும்