close
Choose your channels

பிரபல சூப்பர் ஹீரோவுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன் - நிதி அகர்வால்!

Sunday, November 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் மற்றும் சமீபத்தில் வெளியான உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்த நிதி அகர்வால் ஆகிய இருவரும் பிரபல சூப்பர் ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல இயக்குனர் மாருதி இயக்கத்தில் உருவாகயிருக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி நிலையில் இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிரபாஸ் நடித்த ’ராதே ஷ்யாம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் ரித்தி குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.