படுக்கையறை காட்சி குறித்து கேள்வி கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன் நடித்த படுக்கையறை காட்சி குறித்து கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தனுசுடன் நடித்த ‘மாறன்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனுசுடன் ‘மாறன்’ படத்தில் நடித்த போது அந்த படத்தில் இடம்பெற்ற படுக்கையறை காட்சி எத்தனை முறை படமாக்கப்பட்டது என கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த மாளவிகா, ‘உங்கள் கேள்வியை விட உங்கள் மண்டைக்குள் இருக்கும் மோசமான எண்ணம் தெரிய வருகிறது’ என்று பதிலளித்துள்ளார். மாளவிகாவின் இந்த பதிலடி பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


More News

அமீர்கானின் 'பிகே' பாணியில் ஒரு தமிழ்ப்படம்: முக்கிய வேடத்தில் யோகிபாபு!

அமீர்கான் நடித்த 'பிகே' பாணியில் ஒரு தமிழ் திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பார்த்திபனின் 'இரவின் நிழல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பார்த்திபன் நடித்து இயக்கிய  'இரவின் நிழல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இன்று 297 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் கார்த்தி திரைப்படம்!

கார்த்தி நடித்த திரைப்படம் இன்று 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வருடன் விஜய் சந்திப்பு: பொன்னாடை போர்த்தி வரவேற்ற முதல்வர்!

தளபதி விஜய் சற்றுமுன் முதல்வரை சந்தித்த நிலையில் பொன்னாடை போர்த்தி முதல்வர் விஜய்யை வரவேற்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓடிடிக்கு வருகிறார்கள் கண்மணி-கதிஜா: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கதிஜா என்ற கேரக்டரில் நடிகை சமந்தாவும்