close
Choose your channels

ஓபன் கோட்டில் போட்டோஷுட்… ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்த மாளவிகா மோகனன்!

Tuesday, November 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற நடிகையாக வலம்வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் சினிமாவில் பிரபலமாக இருப்பதைவிடவும் சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களிடையே அதிகளவு வரவேற்பு பெற்றிருக்கிறார்.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “பட்டம்போல“ திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகை மாளவிகா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி எனப்பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். அந்த வகையில் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் அறிமுகமான இவர் அடுத்த படமே தளபதிக்கு ஜோடியாக “மாஸ்டர்“ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது கார்த்தி நரேன் இயக்கிவரும் “மாறன்“ படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். அடுத்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உருவாக இருக்கும் “அருவா“ படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல பாலிவுட்டிலும் முக்கிய இயக்குநர் ரவி உதய்வார் இயக்கும் “யுத்ரா” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் படு பிசியான நடிகையாக உருவெடுத்து இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாகவே செயல்படுகிறார். மேலும் அவர் தனது கிளாமர் புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஓபக் கோட் அணிந்து உள்ளாடை தெரியும் வண்ணம் நடிகை மாளவிகா மோகனன் பதிவிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படம் ரசிகர்களிடையே ஏராளமான லைக்ஸ்களையும் கமெண்டுகளையும் குவித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.