close
Choose your channels

எல்லை மீறி போறீயேம்மா: மாளவிகா மோகனின் வேற லெவல் போட்டோஷூட்டுக்கு நெட்டிசன் கமெண்ட்!

Sunday, March 28, 2021 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தற்போது ஒரு ரவுண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் தனுஷுடன் ஒரு படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகன், இந்தியிலும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருவார் என்பதும், அந்த புகைப்படங்களுக்கு மில்லியன்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படத்திற்கு வேற லெவல் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. ஒரு நெட்டிசன் ’எல்லை மீறி போறீயேம்மா’ என்று கமெண்ட்டை பதிவு செய்துள்ளார்

பச்சை பசேலென்ற உடையில் கிளாமர் தோற்றத்துடன் காணப்படும் மாளவிகாவின் இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பதும், இந்த புகைப்படம் வெளியாகி ஒரு சில மணி நேரங்களே ஆகும் நிலையில் சுமார் 5 லட்சம் லைக்ஸ் குவிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz