close
Choose your channels

சோழ நாட்டு இளவரசியும், பழங்குடியின பெண்ணும்: மாஸ்டர் நாயகியின் மலைக்க வைக்கும் போட்டோஷூட்

Friday, July 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து அசத்திய நடிகை மாளவிகா மோகனன், அதன்பின் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் நாயகியாகும் வாய்ப்பைப் பெற்றார். இந்த படம் வெளிவரும் முன்பே அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன என்பதும் முதல் கட்டமாக ஒரு பாலிவுட் திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் தனுஷ் நடிக்கவுள்ள படம் உள்பட ஒரு சில முக்கிய தமிழ் படங்களிலும் நடிக்க மாளவிகா மோகனன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது சோழநாட்டு பேரரசி மற்றும் பழங்குடியின பெண் போன்ற தோற்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் அள்ளிக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போட்டோஷூட்டில் செய்யப்பட்ட லைட்டிங்ஸ் மற்றும் மேக்கப், உடையலங்காரத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.