ரம்பை, ஊர்வசியை மிஞ்சிய மாளவிகா மோகனன்… ரசிகர்களே ஷாக்காக்கும் வைரல் பிக்!

  • IndiaGlitz, [Wednesday,October 06 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “பேட்ட“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்“ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறிப்போனார்.

இதையடுத்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்ஷுடன் “மாறன்“ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் விரைவில் வெளிவரும் நிலையில் பாலிவுட் சினிமாவிலும் தனது வருகையை அவர் பதிவு செய்திருக்கிறார். பிரபல இயக்குநர் ரவி உதய்வார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகி வரும் “யுத்ரா“ படத்தில் இவர் இணைந்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை மாளவிகா மோகனன் சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாகவே செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் “தேவலோகத்தில் இருந்து பூவுலகில் உதித்த ஊர்வசி“ என்ற கேப்ஷனுடன் ஹாட்டான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாசிடிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளோடு புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

More News

ஸ்மார்ட் போனால் வரும் கொடிய ஆபத்து... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா நேரத்தில் மனித வாழ்க்கை முறை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்விமுறையே மாறிப்போய் இருக்கிறது.

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக விண்வெளியில் ஷுட்டிங் நடத்தும் படக்குழு!

ரஷ்யாவைச் சேர்ந்த இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ என்பவர் தனது The Challenge எனும் புது திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விண்வெளிக்கு சென்றுள்ளார்.

நீண்டநாள் காதலரை மணந்தார் 'ஜெய்பீம்' நடிகை: திரையுலகினர் வாழ்த்து!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

'தளபதி 66' படத்தில் மகேஷ்பாபு மகள்? இதோ ஒரு விளக்கம்

... தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 66ஆவது திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் இதுகுறித்து மகேஷ்பாபு

ரம்யா பாண்டியன் வீட்டுக்கு சென்றாரா தல அஜித்?

தல அஜித் எங்கள் வீட்டிற்கு வந்தார் என்றும் எங்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் நின்று நிதானமாகப் பேசினார் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ரம்யா பாண்டியன் பேட்டி