close
Choose your channels

'மாஸ்டர்' படத்தின் மாஸ் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!

Thursday, March 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம் நேற்றுடன் 50நாட்கள் திரையரங்குகளில் நிறைவு செய்த நிலையில் 50வது நாளை 'மாஸ்டர்’ படக்குழுவினர் கொண்டாடி வந்தனர் என்பது தெரிந்ததே. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் 'மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் 'மாஸ்டர்’ 50வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் நாயகி மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரம்யா ஆகியோர்களுடன் எடுத்துக்கொண்ட மாஸ் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த பதிவில் அவர் கூறியபோது ’எனக்கு மிகவும் பிடித்த ஒரு திரைப்படம். பல ஜாம்பவான்கள் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஒரு திரைப்படம். வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும் வகையில் அந்த படக்குழுவினர் என்னிடம் பழகினார்கள். இந்த ஒரு படம் எனது வாழ்க்கையின் மிக நீண்ட தூரத்திற்கு எடுத்துச் சொல்லும்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.