ரூ.500 கோடி பட்ஜெட்டாக இருந்தாலும் அதில் நடிக்க மாட்டேன்? நடிகை மாளவிகா மோகனன் அதிரடி!!

  • IndiaGlitz, [Monday,July 31 2023]

ஏறக்குறைய அனைத்து தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் நடித்து பிரபலமாக இருந்துவரும் நடிகை மாளவிகா மோகனன் தனது 10 வருட சினிமா வாழ்க்கைக்குப் பிறகு முக்கிய முடிவு ஒன்றை அறிவித்து இருக்கிறார். அந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான நடிகை மாளவிகா மோகனன் மலையாள சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘பட்டம் போல’ திரைப்படத்தில் நடித்து 2013 இல் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவந்த அவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் அதேபோல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாறன்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதாவது சினிமாவிற்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. இனிமேல் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளேன். ரூ.500 கோடி வசூலிக்க கூடிய படமாக இருந்தாலும் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அதில் நான் நடிக்க மாட்டேன். படம் ஓடி வசூலில் சாதனை படைத்தாலும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமாக இருந்தால் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் சிறிய வயதில் இருந்தே நடிகை ஷோபனா, கஜோல், மாதுரி தீட்சித் போன்றோர்களை எனக்குப் பிடிக்கும். இவர்கள் ரசிகர்களின் மனதில் நிற்கும் அளவிற்கு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தனர். அதேபோல நானும் நல்ல படங்களைக் கொடுக்கும் திறமையான இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் நடித்து பிசியான நடிகையாக இருந்துவரும் நடிகை மாளவிகா நடிப்பை தவிர ஒரு பைக் பிரியர் என்பதும் அவர் ஃபார்முலா ஒன் பைக் டிரைவிங்கில் ஈடுபட்டுள்ளார் என்பதும் மேலும் போட்டோகிராபியில் ஆர்வம் கொண்டவர் என்பதும் ரசிகர்கள் அறிந்ததுதான்.

இந்நிலையில் அவர் பெரிய பட்ஜெட் திரைப்படமாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

More News

90-ஸ் கிட்ஸ்களுக்கு இப்படியொரு வேதனையா? உடலுறவு ஆர்வம் குறைந்து வருவதாகத் தகவல்…!

நவீன வாழ்வியல் முறை, உணவு, பணிச்சுமை என்று பல்வேறு காரணங்களால் இன்றைய இளைஞர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது

இது என்னை பயமுறுத்தவில்லை… 95% மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை கருத்து…!

தமிழ் சினிமா மூலம் பிரபலமாகி பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்திருக்கும் பிரபல நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நிலையில்

அடுத்த சீசனுக்கும் வருவேன்.. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஷிவாங்கி நெகிழ்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக வந்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது என்பது தெரிந்ததே.

மீண்டும் கவர்ச்சி களத்தில் இறங்கிய நடிகை நமிதா .. லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை நமிதா திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நிலையில் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி  கிளாமர் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

பாட்டு, இசை, சிற்பம், கடற்கரை, ஐஸ்க்ரீம் .. இந்தோனேஷியாவை அணுஅணுவாக ரசிக்கும் சமந்தா.. வைரல் வீடியோ..!

நடிகை சமந்தா சமீபத்தில் இந்தோனேசியா நாட்டிலுள்ள பாலி என்ற பகுதிக்கு தனது தோழியுடன் சுற்றுப்பயணம் செய்திருக்கும் நிலையில் அங்கிருந்து கொண்டே அவர் சில புகைப்படங்கள் வீடியோக்களை