'தங்கலான்' படத்திற்காக இதையெல்லாம் கற்று கொண்டேன்: மாளவிகா மோகனன்..!

  • IndiaGlitz, [Thursday,June 01 2023]

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்’. கோலார் தங்க வயல் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் காட்சிகளுக்காக ரிவர்சல் செய்த சியான் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சியான் விக்ரம் குணமடைந்து விரைவில் மீண்டும் அவர் படப்பிடிப்புக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகன் தனது கேரக்டர் குறித்த சில தகவல்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 'தங்கலான்’ படத்தில் எனது கேரக்டர் மிகவும் சக்தி வாய்ந்தது, எனது திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு கடினமான படம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் கேரக்டருக்காக சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ரோலிங், கிக்ஸ், ஜம்ப்ஸ் ஆகியவற்றை கற்றுக் கொண்டேன் என்றும் அவர் தெரிவித்தார். இது ஒரு பீரியட் படம் என்பதால் எனது கதாபாத்திரத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் சிலம்பம் சண்டை காட்சிகள் போன்றவை இருக்கும் என்றும் முழு உடல் தகுதியுடன் இருந்தாலே இந்த படத்தின் கேரக்டரை 75% எளிமையாக முடித்து விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது பேட்டி இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் மீண்டும் வேதிகா .. இந்த பிரபல நடிகருக்கு ஜோடியா?

தமிழ் திரையுலகின் நடிகைகளின் ஒருவரான வேதிகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதிலும் அவர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்

வருத்தப்படமா இதைச் செய்யுங்க… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எதை பரிந்துரைக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சுற்றுலா

இந்திய மருமகனாக மாறிய எலான் மஸ்க்… AI சேட்டையால் வைரலாகும் புகைப்படம்!

உலகப் பிரபலங்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது இந்திய மருமகனைப் போன்று உடையணிந்திருக்கும் புகைப்படம்

இந்த அவுட்ஃபிட் ஓகே-வா? நடிகை மாளவிகா மோகனன் புகைப்படத்திற்கு ரசிகர்களின் தாறுமாறான பதில்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை மாளவிகா மோகனன் சுற்றுலா சென்றுள்ள நிலையில்

நம்ம PS- நாயகி வானதிக்கு பிறந்தநாள்... அவருக்குள் இத்தனை திறமையா? ஷாக்கான ரசிகர்கள்!

இயக்குநர் மணிரத்தினத்தின் கனவு திட்டமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகை சோபிதா துலிபாலா