'இந்த சைஸ் ஜீரோ ஃபிட்னஸ் இதற்குத்தானா? மாளவிகா மோகனன் கொடுத்த மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,May 02 2023]

நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் திடீரென மெலிந்து சைஸ் ஜீரோ உடம்புக்கு மாறிய நிலையில் ரசிகர்கள் பலரும் மாளவிகாவுக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இது குறித்த மாஸ் தகவலை தற்போது மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதனை அடுத்து அவர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’, தனுஷ் நடித்த ’மாறன்’ திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். இந்த படத்திற்காக அவர் சிலம்பம் கற்றதாகவும் அவருக்கு சிலம்பம் சண்டை இந்த படத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென அவர் கடந்த சில வாரங்களில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக சைஸ் ஜீரோவுக்கு மாறினார். இதை பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள் என்னாச்சு மாளவிகாவுக்கு என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனது சைஸ் ஜீரோ ஃபிட்டான வீடியோவை வெளியிட்டு ’தங்கலான்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது என்றும் அதற்காகத்தான் இந்த பிட்னஸ் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அடுத்து அவரது வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

பட்டுக்குட்டி பிறந்துட்டா.. மகள் பிறந்ததை மகிழ்ச்சியாக அறிவித்த சின்னத்திரை நட்சத்திர ஜோடி..!

 சின்னத்திரை நட்சத்திர ஜோடி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தங்களது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். 

பீட்டர் பாலுடன் இருந்த உறவு என்ன? வனிதா விஜயகுமார் விளக்கம்..!

சமீபத்தில் பீட்டர் பால் உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் பல ஊடகங்கள் நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் இறந்ததாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன

வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் ஒரு கேஜிஎப் படம்.. ஹீரோ இந்த பிரபலமா?

ஏற்கனவே 'கேஜிஎப்'  மற்றும் 'கேஜிஎப் 2' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கோலார் தங்க வயல் கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

மெட் காலா- பேஷன் நிகழ்ச்சியில் பூனை நடைபோட்ட இந்திய நடிகைகள்… வைரல் புகைப்படம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட் காலா பேஷன் நிகழ்ச்சியில் இந்திய நடிகைகளான நடிகை ஆலியா பட், பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்

பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்படும் 'ஏஐஆர்': தமிழ் உள்பட 6 மொழிகளில் பார்க்கலாம்..! 

அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டி மற்றும் மாண்டலே பிக்சர்ஸ் தயாரித்துள்ள விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்ற பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் (AIR) திரைப்படம்