புல்வெளி படுக்கை… வைல்ட் விலங்குடன் வீடியோ ஷுட் நடத்திய மாஸ்டர் பட நடிகை!

  • IndiaGlitz, [Monday,March 08 2021]

தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் 50 நாட்களைத் தாண்டியும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்து இருந்த நடிகை மாளவிகா மோகனும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவராக மாறிவிட்டார்.

அந்த வகையில் இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் வேற லெவல் வைரலாகி வருகின்றன. நேற்று டிரெக்கிங் சென்று இருந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் புலி உலாவிக் கொண்டு இருந்ததைக் கூட பொருட்படுத்தாத அவர் சற்றுத் தொலையில் இருந்து போட்டோ எடுத்து கொண்டார். தற்போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்தை வீடியோவாகவும் வெளியிட்டு உள்ளார். வைல்ட் அனிமலுடன் இவர் நடத்திய வீடியோ ஷுட் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

கூடவே புல்வெளிக்கு நடுவே நடிகை மாளவிகா மோகனன் படுத்துக் கொண்டு இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க அடித்து இருக்கிறார். “பேட்ட”, “மாஸ்டர்” படத்திற்கு பிறகு தமிழில் இவர் நடிகர் தனுஷ்ஷுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு இந்தியில் இவர் நடிப்பில் வெளியான “யுத்ரா” படத்தி டீசர் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று இருக்கிறது.

More News

ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த அந்த 'பெரிய நடிகர்' யார்?

கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான நடிகைகள் தங்களை படுக்கைக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அழைத்ததாக மீடூ குற்றச்சாட்டை தெரிவித்து வந்தனர்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் தள்ளி போகிறதா? என்ன காரணம்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

நியூயார்க்கில் ரெஸ்ட்டாரெட் திறக்கும் விஜய் பட நாயகி!

விஜய் நடித்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஒருவர் நியூயார்க்கில் ரெஸ்ட்டாரெட் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார் 

புல்வெளிக்கு நடுவே மின்னும் பச்சை நிற தேவதை… வைரலாகும் இளம் நடிகை புகைப்படம்!

தமிழில் நடிகர் ஜெய் நடித்த “வாமனன்“ திரைப்படத்தில் கடந்த 2009 அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த்

மொட்டை மாடியில் போட்டோ ஷுட் நடத்திய முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!

“இதென்ன மாயம்“ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.