காட்டுப் புலியுடன் போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்? வைரல் புகைப்படம்!
தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் “மாஸ்டர்”. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்த நடிகை மாளவிகா மோகனன் தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்து இருக்கிறார். சூப்பர் ஸ்டார் நடித்த “பேட்ட” படத்தில் அறிமுகமாகி, “மாஸ்டர்” படத்தில் மாஸ் காட்டிய அவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் புதுப் படத்தில் நடித்து வருகிறார்.
இதைத் தவிர பாலிவுட்டில் பிரபல இயக்குநர் ரவி உதாய்வர் இயக்கத்தில் உருவாகி வரும் “யுத்ரா” படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சித்தானத் சதுர்வேதிக்கு நடிகை மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் இவர் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் உலாவிக் கொண்டு இருக்கும் ஒரு காட்டுப் புலிக்கு அருகில் தான் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தற்போது பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் டிரெக்கிங் கூட போவாரா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் சிலர் “the best way to start a morning“ என்ற அவருடைய கேப்ஷனுக்கு இது உங்களுக்கு நல்லதா அல்லது புலிக்கு நல்லதா எனக் கிண்டலாகவும் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளனர்.