close
Choose your channels

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் இணைந்த மலையாள திரையுலக பிரபலம்.. செம சம்பவம் இருக்குது..!

Tuesday, April 15, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில், மலையாள திரையுலக பிரபலமான ஒருவர் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, "இந்த படத்தில் ஒரு செம சம்பவம் இருக்குது!" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம், விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுவதால், இது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தை முடித்தவுடன், அவர் முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஏற்கனவே ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பல பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் நிலையில் தற்போது ஹனுமன்கிண்ட் என்ற மலையாள ராப் பாடகர் என்பவர் இணைந்து உள்ளதாகவும், அனிருத் மற்றும் ஹனுமன்கிண்ட் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு பாடலைப் பாடியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான பகத் பாசில் இயக்கிய ’ஆவேஷம்’ திரைப்படத்தில் ஹனுமன்கிண்ட் ஒரு பாடலைப் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ‘ஜனநாயகன்’ படத்திற்காக பாடும் பாடலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment