close
Choose your channels

பிரபல நடிகர்-மிமிக்ரி கலைஞர் சாலை விபத்தில் பரிதாப பலி..! ரசிகர்கள் சோகம்..!

Monday, June 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர் சாலை விபத்தில் பலியானதையடுத்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர் சுதி. 39 வயதான இவர் காரில் தனது நண்பர்களுடன் பயணம் செய்த போது சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மிமிக்ரி கலைஞர் கொல்லம் சுதி கடந்த 2015 ஆம் ஆண்டு ’கந்தாரி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

இந்த நிலையில் கொல்லம் சுதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது அதிகாலை 4.30 மணி அளவில் அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் நடிகர் சுதி உட்பட காரில் சென்ற அனைவரும் காயமடைந்தனர். இதனை அடுத்து படுகாயம் அடைந்த சுதி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நடிகர் சுதி மறைவிற்கு மலையாள திரையுலகம் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos