சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்த மலையாள நடிகர்!

சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’ . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நீரஜ் மகாதேவன் என்பவர் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த படத்தில் ஸ்ரீதரன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். சிம்பு மற்றும் நீரஜ் மகாதேவன் இணைந்த புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்த தமிழ் நடிகை: வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்து நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

'கனா' படத்தை பார்த்து திரையரங்கில் கண்ணீர் விட்ட சீனர்கள்: நன்றி கூறிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய 'கனா' திரைப்படம் சமீபத்தில் சீனாவில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு சீனாவில் நல்ல வரவேற்பு

'டாக்டர்', 'பீஸ்ட்' பாணியில் தான் 'தலைவர் 169' பட டைட்டில்: கசிந்த ரகசியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 169' பட டைட்டில் 'டாக்டர்' மற்றும் 'பீஸ்ட்'  பாணியில்தான் இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. 

ஹவுரா பிரிட்ஜில் படப்பிடிப்பை முடித்த சி.எஸ்.அமுதன்: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

'தமிழ் படம்', 'தமிழ் படம் 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் 'ரத்தம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு

அஜித், விஜய் இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: வைரலாகும் மோசமான ஹேஷ்டேக்!

கடந்த பல ஆண்டுகளாக அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்றாலும் தற்போது அவர்கள் மோதிக் கொள்வது மிகவும் அநாகரீகமாக இருப்பதாக திரையுலக பிரபலங்கள் கருத்து