close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பின்னர் கொரோனா வைரஸ் காரணமாக சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

இந்த நிலையில் கடந்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது என்பதும், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் மற்றும் துணை இயக்குனர் ஷைன் டாம் சாக்கோ என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் அவர் இணைந்துள்ளார் என தெரிகிறது. இது குறித்த புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ‘பீஸ்ட்’ படத்தில் என்ன கேரக்டர் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணாதாஸ் உள்பட பலர் நடித்து வருகிறார்கள் என்பதும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz