அஜித்துக்கு ரசிகராக மாறிய பிரபல மலையாள நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,January 05 2016]

தல அஜித்தின் பெயர் மற்றும் படக்காட்சிகளை தங்கள் படங்களில் பயன்படுத்தி புரமோஷன் செய்யும் கோலிவுட் நடிகர்கள் பலரை நாம் பார்த்துள்ளோம். அதுமட்டுமின்றி கோலிவுட்டில் இளையதலைமுறை நடிகர்கள் பலர் அஜித்தின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. இந்நிலையில் கோலிவுட் நடிகர்கள் மட்டுமின்றி நமது பக்கத்து மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள நடிகர் ஒருவரும் அஜித்தின் தீவிர ரசிகர் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.


கடந்த சில வருடங்களாக மலையாள திரையுலகில் வெற்றி நடைபோட்டு வருபவரும் தமிழில் தனுஷ் நடித்த 'சீடன்' படத்தில் நடித்தவருமான நடிகர் உன்னிமுகுந்தன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தான் ஒரு தீவிரமான அஜித் ரசிகர் என்று ஒப்பனாக கூறியுள்ளார்.

கேரளாவில் சூப்பர் ஸ்டார்களாக மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் பெரும்புகழுடன் இருக்கும் நிலையில் இளையதலைமுறை மலையாள நடிகர் ஒருவர் தமிழ் நடிகர் அஜித்தை தன்னுடைய விருப்பத்திற்குரிய நடிகர் என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

More News

ஜெயம் ரவியின் 'மிருதன்' ரிலீஸ் தேதி?

கடந்த 2015ஆம் ஆண்டில் நான்கு வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவியின் அடுத்த படமான 'மிருதன்' தமிழில் வெளிவரும் முதல் 'ஜோம்பி' படம் என்று...

பொங்கலுக்கு உதயநிதி தரும் டபுள் ட்ரீட்

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடித்த 'கெத்து' படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது...

தற்காப்புக்காக பி.வாசு எழுதிய கடிதம்

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் பி.வாசு கடந்த பல வருடங்களாக வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே...

'மிருதன்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

கடந்த வருடம் ரோமியோ ஜூலியட், சகலகலாவல்லவன், தனி ஒருவன் மற்றும் பூலோகம் என நான்கு வெற்றி படங்களை கொடுத்து 2015ஆம் ...

சூப்பர் ஸ்டாரை இயக்குகிறார் சீயான் விக்ரம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சீயான் விக்ரம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே...