close
Choose your channels

மாயமான பிரபல நடிகரின் உடல் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!

Tuesday, January 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் அவருடைய உடல் கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கரா என்பவர் கடந்த ஞாயிறன்று திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். இதையடுத்து அவரை தேடும் பணியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவரது வீட்டின் பின் பக்கம் இருந்த கிணற்றின் வலை திறந்து இருந்ததால் அவர் கிணற்றில் விழுந்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பார்த்தபோது அங்கு அவரது உடல் இருந்தது. இதனை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கரா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மலையாளத்தில் வெளியான இங்கிலீஷ் மீடியம், காக் ஷி அம்மினி பில்லா, மழமேகப் பிறவுகள், ரமணம் உட்பட பல படங்களில் நடித்த ஜனார்த்தனன் மூழிக்கரா, மலையாள டிவி சீரியல்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 60 வயதான ஜனார்த்தனன் மூழிக்கரா திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதும் அவருக்கு மூன்று சகோதரர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.