கயிற்றில் சிக்கிய சுறா..கை கொடுத்து காப்பாற்றிய மீனவர்கள்..!

  • IndiaGlitz, [Thursday,December 05 2019]

 

மலேசியாவில் கயிற்றில் சிக்கிக் கொண்ட தன்னைக் காப்பாற்றிய மீனவர்களுக்கு சுறா ஒன்று நன்றி கூறிய வீடியோ வெளியாகி உள்ளது.

சரவாக் என்ற இடத்தில் உள்ள பின்டுலு கடற்பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திமிங்கலச் சுறா எனப்படும் மீன் ஒன்று பெரிய அளவிலான கயிறு இறுக்கப்பட்டதால் நீந்த முடியாமல் தவித்தது.இதனைக் கண்ட மீனவர்கள் மீனின் அருகே சென்று கயிற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போ சுறா மிகவும் அமைதியாக இருந்தது. சில நிமிடங்களுக்கு பின்னர் மீனவர்களை கயிற்றை அறுத்து சுறாவை விடுவித்தனர். அடுத்த நொடியில் உற்சாகமடைந்த சுறா தனது வாலை அங்குமிங்குமாகச் சுழற்றி கடல் நீரை விசிறியடித்த காட்சி, நன்றி தெரிவிப்பதுபோல் இருந்தது.

உலகெங்கும் உள்ள கடல்களில் நாட்டில் உள்ள மனிதர்களால் உருவாகும் குப்பைகள் கொட்டப்படுவதால் நீர்வாழ் உயிரினங்கள் இதுபோல் பெரும் சிக்கல்களுக்கு உள்ளாகின்றன. இந்த குப்பைகளால் நீர் வாழ் உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சியே கேள்விக்குறியாகி உள்ளது. குப்பைகளை கடலில் கொட்டாமல் கவனமாக கையாண்டு சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மக்கச்செய்யும் திட்டங்கள் செல்படுத்த வேண்டும் என்பது சுற்று சூழ்நிலை ஆய்வாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.