close
Choose your channels

65 வயது தயாரிப்பாளர் மீது டீஜ் ஏஜ் நடிகை கூறிய திடுக்கிடும் பாலியல் புகார்!

Saturday, January 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’ஹோஸ்டேஜஸ்’ என்ற திரைப்படம் உள்பட ஒரு சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மல்ஹார் ரத்தோட். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு டீன் ஏஜில் திரையுலகில் வாய்ப்பு கேட்டு வந்தபோது 65 வயது தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த தயாரிப்பாளர் தன்னிடம் ‘உன்னில் ஒருவனாக நான் இருக்கிறேன்’ என்று கூறியதாகவும் அவர் அவ்வாறு கூறியது தனக்கு முதலில் புரியவில்லை என்றும் கூறிய மல்ஹார் ரத்தோட் அதன் பிறகு அந்த தயாரிப்பாளர், ‘உன் மேலாடையை கழற்று’ என்று கூறியவுடன் பயத்தில் சினிமா வாய்ப்பே தேவையில்லை என்று அங்கிருந்து ஓடி வந்து விட்டதாக பேட்டியில் கூறினார். ஆனால் அந்த தயாரிப்பாளர் யார் என்பதை கூற அவர் மறுத்து விட்டார்.

ஏற்கனவே கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட ’மீடு’’அனுபவங்களை அதிர்ச்சியுடன் கூறியிருக்கும் நிலையில் தற்போது மல்ஹார் ரத்தோட் என்ற நடிகையும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.