close
Choose your channels

கழுத்தைச் சுற்றிய மலைபாம்பு? கமல்ஹாசன் பட நடிகையின் கெத்தான புகைப்படம் வைரல்!

Friday, June 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் மற்றும் ஒருசில தென்னிந்திய திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் தன்னுடைய கழுத்தில் மலைப்பாம்பை சுற்றிக் கொண்டிருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தாறுமாறான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் ‘குவாஹிஷ்’, ‘மர்டர்’ போன்ற திரைப்படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பின்னர் கவர்ச்சி வேடங்களுக்குத் தாவியவர் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் பல்வேறு சீன திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் பிரபல நடிகர் ஜாக்கி சானுடன் இணைந்து ‘தி மித்’ திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது.

தமிழிலும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் நடித்த நடிகை மல்லிகா ஷெராவத் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றார். பின்னர் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஒஸ்தி’ திரைப்படத்தில் ஒருபாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்திய சினிமாவை விட்டே ஒதுங்கியிருக்கும் அவர் அமெரிக்காவில் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய ரசிகர்களிடையே எப்போதும் கவர்ச்சி வேடங்களுக்காகப் புகழ்பெற்ற நடிகை மல்லிகா ஷெராவத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாகவே செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் பதிவிடும் பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை மல்லிகா ஷெராவத் தன்னுடைய கழுத்தில் மலைபாம்பை சுற்றி வைத்துக்கொண்டு அதோடு கொஞ்சி விளையாடுவது போன்ற போட்டோஷுட்டை நடத்தியுள்ளார். அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் ‘போல்ட் லேடி’ என்று கமெண்ட்ஸ்களை பதிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.