'மாமன்னன்' ரன்னிங் டைம்.. அதிகாலை காட்சி உண்டா?


Send us your feedback to audioarticles@vaarta.com


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ’மாமன்னன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
’மாமன்னன்’ திரைப்படம் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு ’யுஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 156 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 36 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 155 நிமிடங்கள் என்பதும் அதேபோல் அடுத்த படமான ’கர்ணன்’ படத்தின் ரன்னிங் டைம் 159 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’மாமன்னன்’ திரைப்படம் நாளை பக்ரீத் விடுமுறை நாளில் வெளியாக இருக்கும் நிலையில் அதிகாலை காட்சிகள் கிடையாது என்றும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இந்த படம் 600 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் வெளிநாட்டிலும் இந்த படம் அதிக திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்த இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments