மீண்டும் இணையும் 'மாமன்னன்' கூட்டணி.. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மாஸ் தயாரிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,September 30 2023]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் நடித்த உதயநிதி, வடிவேலு மற்றும் பகத்பாசில் ஆகிய மூவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தான் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்றும் முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் வடிவேலுவை மீண்டும் பழைய வடிவேலுவாக பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே வடிவேலு தனது இரண்டாவது இன்னிசை ஆரம்பித்துள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நடிப்பு அரக்கன் பகத் பாசில் இந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு இந்த படம் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த பிரபலங்களுமா? செம்ம போட்டியாக இருக்கும் போல..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நாளை மறுநாள் முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து கசிந்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

பிரகாஷ்ராஜை அடுத்து சித்தார்த் இடம் மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்.. ஒற்றுமையில் திரையுலகம்..!

நடிகர் சித்தார்த் நேற்று கர்நாடக மாநிலத்தில் தான் நடித்த 'சித்தா' என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது திடீரென கன்னடர்கள் சிலர் வந்து  நிகழ்ச்சியை நிறுத்தினர்.

'துருவ நட்சத்திரம்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா? சரமாரியாக கட் செய்த சென்சார் அதிகாரிகள்..!

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் ஒரு சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

உறுதி செய்யப்பட்ட 2 பொங்கல் ரிலீஸ் படங்கள்.. மேலும் 2 படங்கள் இணையுமா?

இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் கார்த்தியின் 'ஜப்பான்' மற்றும்  கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா 2' உள்பட ஒரு சில படங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில்

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4.. குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம்

தமிழகமெங்கும் குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில்,