மேற்குவங்கத்தில் ஜிஎஸ்டியில் தள்ளுபடி: திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Monday,July 03 2017]

ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியால் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மேற்குவங்க மாநில அரசு திரையரங்க கட்டணத்தில் மாநில அரசின் சார்பில் தள்ளுபடி வழங்கியுள்ளது.
ரூ.100 கட்டணத்திற்குள் என்றால் 18% ஜிஎஸ்டி வரியும், ரூ.100 கட்டணத்திற்கு மேல் என்றால் 28% ஜிஎஸ்டி வரியும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இவற்றில் பாதி அதாவது 9% மற்றும் 14% மாநில அரசுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாநில அரசின் 9% வரியில் 7% வரியை தள்ளுபடி செய்வதாகவும் அதேபோல் 14% வரியில் 12% தள்ளுபடி செய்வதாகவும் மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. இந்த சலுகை பெங்காலி, நேபாளி மொழி திரைப்படங்களுக்கு மட்டும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க அரசின் இந்த அறிவிப்பால் அம்மாநில திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக ஜிஎஸ்டிக்கு முன் ஒரு திரையரங்கின் கட்டணம் ரூ.80 என்று வைத்துக்கொண்டால் தற்போதைய டிக்கெட்டின் விலை என்ன தெரியுமா?
திரையரங்க கட்டணம் ரூ.80.00
மத்திய அரசின் ஜிஎஸ்டி 9% ரூ.7.20
மாநில அரசின் ஜிஎஸ்டி 9% ரூ.7.20
மொத்தம் ரூ.94.40
இவற்றில் மாநில அரசின் தள்ளுபடி 7% ரூ.5.60
தள்ளுபடி போக டிக்கெட் கட்டணம் ரூ.88.80
எனவே பழைய கட்டணத்தை விட வெறும் ரூ.8.80 மட்டுமே புதிய கட்டணத்தில் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க அரசை போல தமிழக அரசும் தமிழ்ப்படங்களுக்கு மட்டும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

More News

நாசர் குடும்பத்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான நாசர் வீட்டுக்கு தளபதி விஜய் திடீர் விசிட் அடித்து நாசர் குடும்பத்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

டிடிஎச் மூலம் திரைப்படங்கள் வெளியீடு: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி திட்டம்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது படங்களில் பின்னால் வரக்கூடியதை முன்கூட்டியே கூறியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜல்லிக்கட்டு ஜூலியின் முதல் காதல் ஆல்பம்

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஊடகங்களின் பார்வையால் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜூலி.

மருத்துவமனையில் முக ஸ்டாலின்

திமுக செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெஸ்ஸி த்ரிஷாவை மீண்டும் பார்க்க ஒரு சந்தர்ப்பம்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த 'விண்ணை தாண்டி வருவாயோ' வெற்றி படம் இன்றளவும் காதலர்களின் மனம் கவர்ந்த படங்களின் பட்டியலில் உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஜெஸ்ஸியாகவே த்ரிஷா வாழ்ந்தார் என்றும் கூறலாம்...