படப்பிடிப்பில் பாலா என்னை அடித்தாரா? ’வணங்கான்’ நடிகை கூறிய விளக்கம்..!

  • IndiaGlitz, [Friday,March 01 2024]

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் ’வணங்கான்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் மமிதா பைஜூ என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலா தன்னை அடித்துவிட்டார் என்று கூறியதாக செய்திகள் பரவிய நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்

நான் அந்த பேட்டியில் கூறிய ஒரு சிறிய பகுதியை மட்டும் வெட்டி எடுத்து வதந்திகளை பரப்பி உள்ளார்கள், அது முற்றிலும் உண்மை இல்லை என மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்

‘வணங்கான்’ படத்திற்காக நான் கிட்டத்தட்ட ஒரு வருடம் அந்த டீமிடம் பணி புரிந்துள்ளேன். பாலா உள்பட இயக்குனர் டீமில் உள்ள எல்லோரும் என் மீது மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அவர்களுக்கும் எனக்கும் ஒரு நல்ல நட்பு பிணைப்பு இருந்தது.

பாலா சார் எனக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார், என்னுடைய நடிப்பு நன்றாக வர வேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வார், அவர் என்னை ஒரு சிறந்த நடிகையாக மாற்ற எடுத்த முயற்சிகள் குறித்தும் அந்த பேட்டியில் நான் நிறைய கூறியுள்ளேன், ஆனால் அதெல்லாம் அந்த பேட்டியில் வரவில்லை.

பாலா சார் படப்பிடிப்பின்போது கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருப்பார் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக வதந்திகளில் கூறியபடி அவர் நடிகர் நடிகைகளை அடிக்க மாட்டார், ஒரு படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக இயக்குனர் ஸ்ட்ரிக்டாக இருப்பதில் தவறு இல்லை, ஆனால் நான் கூறியதை நாம் முழுவதுமாக பேட்டியில் வெளியிடாமல் ஒரு சிறு பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி தேவையில்லாமல் வதந்தியை பரப்பி உள்ளனர் என்று நடிகை மமிதா பைஜூ விளக்கம் அளித்துள்ளார்.

More News

கிருத்திகா உதயநிதி அடுத்த படத்தில் இணைந்த கமல் மகள்.. வைரல் புகைப்படம்..!

இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடித்து வரும் 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன்

மாசி மாத சிறப்புகள்! மாசி மாதத்தில் செய்ய வேண்டியவை?- ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

மாசி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கும், குல தெய்வத்தை வழிபடுவதற்கும் சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில் எந்த செயலை செய்தாலும் லாபம் தரும்.

ஜோதிகாவின் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திய ரசிகை.. நெகிழ்ச்சியுடன் கூறிய நன்றி..!

நடிகை ஜோதிகாவின் பாடலை ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு இருந்த ரசிகைக்கு ஜோதிகா 'தனது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி' என்று பதில் அளித்த நிலையில் அந்த ரசிகை நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் கிரிக்கெட் வீரரின் பயோபிக் படமா? ரஜினிக்கு என்ன கேரக்டர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டதாக கூறப்பட்ட

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம்.. நடிகை மீனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை மீனா நடித்த திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கும் நிலையில் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதையடுத்து மீனாவுக்கு வாழ்த்துக்கள்