ஆந்திர முதலமைச்சரை அடுத்து கேரள முதலமைச்சராகும் பிரபல நடிகர்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து இருந்தார் என்பதும் ’யாத்ரா’ என்ற டைட்டிலில் வெளியான இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்த மம்முட்டி, தற்போது கேரளாவில் முதலமைச்சராக இருந்து வரும் பினராயி விஜயன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலும் அவருடைய கேரக்டரில் நடிக்க உள்ளார்

‘ஒன்’ என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தை சந்தோஷ் விஸ்வநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரூபாய் 50 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

ஏற்கனவே டாக்டர் அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த மம்முட்டி இந்த படத்திலும் பினராயி விஜயன் வேடத்தில் கச்சிதமாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது